
தமன்னாவின் தாராள நடிப்பு : ரஜினிகாந்த், சிரஞ்சீவி ரசிகர்கள் அதிர்ச்சி
குறிப்பாக, ரஜினி ரசிகர்களுக்கும், சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் அது அதிக அதிர்ச்சியைத் தந்துள்ளது. தமன்னா தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர்" படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் "போலா சங்கர்" படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ரஜினிகாந்தும், தெலுங்கில் சிரஞ்சீவியும் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்கள். அவர்களது படங்களை குடும்பத்துடன் வந்து பார்ப்பவர்கள் அதிகம். அந்தப் படங்களில் தமன்னா தான் கதாநாயகி.
ஆபாசமான விதத்தில் வெப் தொடரில் நடித்துள்ளதால் தமன்னாவின் இமேஜ் தற்போது தள்ளாடி வருகிறது. அது "ஜெயிலர்" படத்திற்கும் "போலா சங்கர்" படத்திற்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த வாரம் தமன்னா நடித்துள்ள மற்றொரு தொடரான "லஸ்ட் ஸ்டோரிஸ் 2" வேறு வர உள்ளது. அதிலும், ஆபாசமாகத்தான் நடித்துள்ளார் என்று தகவல். முத்தக் காட்சிகளுக்குக் கூட இத்தனை வருடங்களாகத் தடை சொன்ன தமன்னா திடீரென இப்படி மாறி நடிப்பதன் காரணம் பலருக்கும் புரியவில்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!