ஜூன் 23ல் திரைக்கு வரும் சுந்தர்.சியின் தலைநகரம் 2
Advertisement
Advertisement
ஜூன் 23ல் திரைக்கு வரும் சுந்தர்.சியின் தலைநகரம் 2
ஜூன் 16, 2023
அ நிறம் | அளவு
Advertisement
கடந்த 2006ம் ஆண்டில் சுராஜ் இயக்கத்தில் சுந்தர். சி நடித்த வெளியான படம் தலைநகரம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை முகவரி படத்தை இயக்கிய துரை இயக்கி இருக்கிறார். தலைநகரம் படத்தின் முதல் பாகத்தில் வடிவேலு இடம் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தில் அவர் இடம் பெறவில்லை. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது ஜூன் 23ம் தேதி தலைநகரம் 2 படம் திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதோடு இதே நாளில் ரெஜினா, அழகிய கண்ணே, தண்டட்டி ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!