
‛நா ரெடி... : விஜய் பிறந்தநாளில் வெளியாகும் ‛லியோ முதல் பாடல்
இந்நிலையில் வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ‛‛நா ரெடி..." என குறிப்பிட்டுள்ள அந்த பாடல் பற்றி வெளியிடப்பட்ட போஸ்டரில் கையில் துப்பாக்கி உடன் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இருக்க, பின்னணியில் நிறைய நடன கலைஞர்கள் சரக்கு கிளாஸ் உடன் கும்மாளம் அடிப்பதையும், நெருப்பு போன்ற உருவில் சிங்கம் தோற்றம் இருப்பதையும் போஸ்டரில் காண முடிகிறது. அனேகமாக இந்தபாடல் லியோ படத்தின் துவக்க பாடலாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதை விஜய்யே பாடியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தபடம் வருகிற அக்., 19ம் தேதி வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!