
கீர்த்தி சுரேஷ், ஒரு மாம்பழம் சாப்பிட்டதற்கு ஒன்பது லட்சம் லைக்ஸ்
ரசிகர்கள், ரசிகைகள் எதற்காக அப்படி லைக்குகளைக் கொடுப்பார்கள் என்பது தெரியாது. நேற்று நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு மாம்பழத்தை சாப்பிடும் குட்டி வீடியோவிற்கு ஒன்பது லட்சம் லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
“சீசன் முடிவதற்குள் பண்டூரி மாம்பழங்களைச் சாப்பிடுங்கள்,” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவைப் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். மாம்பழத்தை அவர் ருசித்து சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து லைக்குளைப் போட்டுவிட்டார்கள் போலும்.
தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள "மாமன்னன்" படம் இந்த மாதக் கடைசியில் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!