
லால் சலாம் படப்பிடிப்பு காட்சி கசிந்தது
இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவண்ணாமலை, மும்பை பகுதிகளில் நடந்தது. தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில் ரஜினி கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். ரஜினியும் ரசிகர்கள் முன் தோன்றி அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைத்தார்.
மக்கள் கூடினாலும் படப்பிடிப்புகள் ரகசியமாக நடந்தது. என்றாலும் தற்போது படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளது. இதில் ரஜினி மொய்தீன் பாய் கெட்-அப்பில் இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. செல்போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!