துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
Advertisement
Advertisement
துல்கர் சல்மான் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்
ஜூன் 13, 2023
அ நிறம் | அளவு
Advertisement
நடிகர் துல்கர் சல்மான் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது கிங் ஆப் கோதா படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே அவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த சீதா ராமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கின்றனர். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் முன்னிட்டு அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!