
மெடிக்கல் கிரைம் த்ரில்லர் படத்தில் டாக்டராக நடிக்கும் தான்யா
படம் பற்றி இயக்குனர் ஜேபி கூறியதாவது: இயக்குனர் மிஷ்கினிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தேன். அவர் இயக்கிய படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தும் இருக்கிறேன். இப்போது இந்த படத்தின் மூலம் இயக்குராகி இருக்கிறேன். இது ஒரு மெடிக்கல் த்ரில்லர் படம். மீனவர் சங்கத் தலைவர் ஒருவருக்கும், அரசு மருத்துவமனை டாக்டருக்கும் நடக்கும் மோதல்தான் கதை. மீனவர் சங்கத் தலைவராக டேனியல் பாலாஜியும், அரசு டாக்டராக தான்யா ரவிச்சந்திரனும் நடிக்கிறார்கள். பிபி எனப்படும் ரத்த அழுத்தம் 180 தாண்டி விட்டால் மிகவும் ஆபத்தானது. அதனால்தான் படத்திற்கு பிபி 180 என்று தலைப்பு வைத்திருக்கிறேன். புதுச்சேரியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!