
கமல்ஹாசன் - எச் வினோத் கூட்டணி உறுதி
இதனிடையே நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய விவசாயிகளை கமல்ஹாசன், எச் வினோத் நேற்று கமல்ஹாசனின் சென்னை, ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஜுன் 17, 18 தேதிகளில் 2023ம் ஆண்டிற்கான தேசிய நெல் திருவிழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசனை விவசாயிகள் அழைத்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன், எச் வினோத் இந்த சந்திப்பில் சேர்ந்து கலந்து கொண்டதால் இருவரும் இணைய உள்ள கமல்ஹாசனின் 233வது படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பதற்கு முன்பு குறுகிய காலத் தயாரிப்பாக இப்படம் இருக்கலாம் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!