
முதன்முறையாக கதை நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
தற்போது முதன் முறையாக "காடப்புறா கலைக்குழு" என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியிருக்கிறார். இன்னொரு நாயகனாக காளி வெங்கட் நடிக்கிறார். காளி வெங்கட் ஏற்கெனவே பல படங்களில் கதை நாயகனாக நடித்து விட்டார். இந்த படத்தை ராஜா குருசாமி என்ற புதுமுகம் இயக்குகிறார். ஹென்றி இசை அமைக்கிறார். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி சினி புரொடக்ஷன் சார்பில் முருகானந்தம் வீரராகவன், சண்முகப்ரியா முருகானந்தம் தயாரிக்கிறார்கள். இந்தப் படம் கரகாட்டத்தில் ஆடும் ஆண் நடன கலைஞர்களை பற்றிய காமெடி படமாக உருவாகிறது. இதில் ஆண் கரகாட்ட கலைஞராக முனீஷ்காந்தும், நாதஸ்வர கலைஞராக காளி வெங்கட்டும் நடிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!