
டாடா, அயோத்தி, குட்நைட் வரிசையில் போர் தொழில்
அதையும் மீறி நல்ல கதையம்சம் இருந்தால் அந்தப் படங்களை நாங்கள் பார்க்கத் தவறுவதில்லை என அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள் மக்கள். கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த படங்களில் "டாடா, அயோத்தி, குட் நைட்" ஆகிய மூன்று சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பையும், குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றன. அதற்கு முக்கியமான காரணம் அதில் இருந்த கதையம்சம், இயல்பான கதாபாத்திரங்கள், சுவாரசியமான, நெகிழ்வான காட்சிகள் ஆகியவற்றைச் சொல்லலாம்.
அந்தப் படங்களின் வரிசையில் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த "போர் தொழில்" படமும் இடம் பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பும், விமர்சகர்களின் வரவேற்பும் ஒரு சேரக் கிடைத்துள்ளது. படம் வெளியான நாளில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பெரிய தியேட்டர்கள், அதிகமான காட்சிகள் கிடைக்காத இந்தப் படத்திற்கு அடுத்த இரண்டு நாட்களிலேயே பெரிய தியேட்டர்கள், அதிகக் காட்சிகள் கிடைத்துள்ளது.
"பொன்னியின் செல்வன் 2" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் விளம்பரங்களில், புரமோஷன்களில் சரத்குமாருக்கு முக்கியத்துவம் தரவில்லை. அந்தக் குறையை சரத்குமாருக்கு இந்தப் படம் முழுவதுமாக போக்கியிருக்கிறது. படத்தின் இரண்டு கதாநாயகர்களில் அவரும் ஒருவர் என்று சொல்லும் விதத்தில் படம் முழுவதும் வருகிறார். இப்படத்தின் வெற்றி அவருக்கு இன்னும் பல வாய்ப்புகளை பெற்றுத் தரும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!