சாஹோ பட இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவல் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி . இந்த படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஆக்ஷன் நிறைந்த அதிரடி படமாக உருவாகிறது. இந்த நிலையில் இப்போது இந்த படத்தில் கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்று படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!