
தமன்னாவுக்கு ரஜினி கொடுத்த பரிசு
ஜெயிலர் படத்தின் மூலம் முதன்முதலாக ரஜினியுடன் இணைந்திருக்கிறார் தமன்னா. இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின் போது தமன்னாவுக்கு, ஆன்மிக பயணத்திற்கான புத்தகம் ஒன்றை தனது கையெழுத்தை போட்டு பரிசாக அளித்திருக்கிறாராம் ரஜினி. இதை பெற்றுக் கொண்ட தமன்னா, ரஜினி கொடுத்த இந்த பரிசை என்றென்றும் மறக்க மாட்டேன் என்று தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் ‛‛ரஜினி உடன் பணியாற்றியது கனவு நனவான தருணம். ஜெயிலர் படப்பிடிப்பில் நான் கழித்த நாட்களின் நினைவுகளை எப்போதும் நினைத்து பார்த்து ரசிப்பேன்"" என்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!