
சாண்டி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா
ஜூன் 09, 2023
Advertisement
நேரம், பிரேமம் போன்ற படங்களின் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்தபட தோல்விக்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் அடுத்து இயக்கும் தமிழ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். வித்தியாசமான காதல் கதைகளத்தில் இந்தப்படம் தயாராக உள்ளதாம்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!