
இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாவும் இந்தியன்-2 படத்தில் நடித்துள்ளதாகவும், அவரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இவர் நடித்திருக்கும் செய்தியை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும், படம் வெளியீட்டின்போது அதனை அறிவிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதனை எஸ்.ஜே.சூர்யா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவரின் அடுத்தடுத்த படங்களின் பட்டியலை குறிப்பிட்டார். "பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2, கேம் சேஞ்சர் படங்களில் நடித்துள்ளேன். அதுபோக, முக்கியமான ஒரு படம்" எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த முக்கியமான படம் குறித்த கேள்விக்கு "அதனை காலம் சொல்லும். நான் சொல்லக் கூடாது" என்றார். இதனையடுத்து எஸ்.ஜே.சூர்யா, இந்தியன்-2 படத்தை தான் குறிப்பிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!