
அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு புனேயில் தொடங்குகிறது
இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளுக்காக அஜித்தும், மகிழ்திருமேனியும் லண்டனுக்கு சென்று தற்போது சென்னை திரும்பி விட்டார்கள். அங்கு அஜித்தின் புதிய கெட்டப்புக்கான போட்டோ சூட் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்க உள்ளது . இதற்காக அங்கு ஒரு பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. அதோடு முதல் கட்ட படப்பிடிப்பில் வில்லன்களுடன் அஜித் மோதும் அதிரடியான சண்டை காட்சி படமாக உள்ளது.
அஜித்தின் கடந்த சில படங்களில் ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இடம்பெறாமல் ஆக்சனுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தில் ஆக்சனுக்கு இணையாக ரொமான்டிக் காட்சிகளும் இடம் பெறுகிறதாம். தற்போது தொடங்கப்படும் படப்பிடிப்பை இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விடாமுயற்சி படத்தை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார் மகிழ்திருமேனி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!