
பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம்
படம் பற்றி இயக்குனர் ஆண்டனி கூறியதாவது: ஹாரர் - டார்க் காமெடி படமாக உருவாகியுள்ள "பிம்பிளிக்கி பிலாப்பி" பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 2,000 கோடி வரை பரிசாக வெல்லக் கூடிய லாட்டரி முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த லாட்டரி சீட்டை தேடி செல்லும் கும்பல் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறது. அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே படத்தின் மையக்கதை. கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்ட "பிம்பிளிக்கி பிலாப்பி" டீசரை பார்த்த உலகெங்கிலும் இருந்து வந்திருந்த இயக்குநர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் வெகுவாக பாராட்டினர். பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள அழகான பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!