
விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ!
அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் "பாயும் ஒளி நீ எனக்கு". வாணி போஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாகர் இசையமைத்துள்ள இந்த படத்தை கே. எம்.எச் புரொடக்சன்ஸ் மற்றும் எஸ்.பி சினிமாஸ் இரு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் "பாயும் ஒளி நீ எனக்கு" திரைப்படம் வருகின்ற ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!