
ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல்
அவர் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தங்களது வீட்டையோ அல்லது சொத்தையோ வங்கியில் அடமானம் வைத்து தான் படம் எடுத்தார்கள். இதற்கு 24 முதல் 28 சதவீதம் வரை வட்டி செலுத்தினார்கள். அப்படித்தான் பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் 180 கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்த படம் ஐந்தரை வருடங்கள் எடுக்கப்பட்டது. அதன் பிறகு 24 சதவீதம் வட்டியும் சேர்த்து இந்த படத்தை வங்கியில் செலுத்தினார். அந்த வகையில் பாகுபலி படத்திற்கு 300 முதல் 400 கோடி ரூபாய் கடன் வாங்கி எடுத்தார்கள். ஒருவேளை இந்த படம் வெற்றி பெறாவிட்டால் தயாரிப்பாளரின் நிலை என்னவாகி இருக்கும்? என்றாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அந்த படத்தை எடுத்தார் தயாரிப்பாளர் என்று தெரிவித்துள்ளார் ராணா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!