
போர் வீரனாக நடிக்கும் நிகில்
இது தொடர்பாக தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: "சுயம்பு" என்றால் "தானாக பிறந்ததுஅல்லது தன் சொந்த விருப்பத்தால் உருவாக்கப்பட்டது என அர்த்தம். இது ஒரு மில்லினியத்திற்கு முந்தைய கதை. இது ஒரு தனி மனிதனின் காவியமாக, ஒரு பேரரசின் பொற்காலத் தொடக்கமாக உருவாகிறது. நிகில் "தி லெஜண்டரி வாரியர்" என்று இதில் அறிமுகப்படுத்தப்படுகிறார். புகழ்பெற்ற போர் வீரரின் காவிய படைப்பு மகத்தானதாக வெளிவர இருக்கிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் "சுயம்பு". இது சிறந்த தொழில்நுட்ப தரத்துடன் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!