
இனி ரஜினி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை : அண்ணன் சொல்கிறார்
என்றாலும் ரஜினி மனம் மாறி என்றாவது மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்று அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினி இனி அரசியலுக்கு வந்தாலும் பலன் இல்லை என்று அவரது அண்ணன் சத்ய நாராயணன் கூறியிருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்த அவர் வழிபாடு முடிந்து திரும்பியதும் நிருபர்களிடையே பேசினார். அப்போது ரஜினி அரசியலுக்கு வரும் வாய்ப்பு குறித்து கேட்டபோது “ரஜினியின் ஜெயிலர், லால் சலாம் திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. கடவுளின் அருளால் அவர் நீண்ட காலம் நலமாக இருக்க வேண்டும். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார். அவருக்கு வயதாகிவிட்டது. அவர் இனி அரசியலுக்கு வந்தாலும் பிரயோஜனம் இல்லை. யாருக்கும் ஆதரவு அளிக்கவும் வாய்ப்பில்லை" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!