
முறியடிக்கப்படுமா 2.0 வசூல் சாதனை...?
கடந்த வருடம் வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தின் முதல் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் 500 கோடிக்கும் கூடுதலான வசூலுடன் முடிவுக்கு வந்தது. அடுத்து கடந்த மாதம் வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தின் இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் பாகத்தின் வசூலையே முறியடிக்க முடியாமல் இரண்டாம் பாகத்தின் தியேட்டர் வசூல் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள்தான் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சில பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளன. அந்த வசூலை வேறு எந்தப் படமும் முறியடிக்கக் கூடாது என்பதுதான் ரஜினி ரசிகர்களின் பேராசையாக இருக்கும். கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "விக்ரம்" படம் தமிழக வசூலில் அதிக லாபத்தைக் கொடுத்த படம் என்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை ரஜினிகாந்த் அவர் நடித்து அடுத்தடுத்து வெளிவரும் படங்களின் மூலம் முறியடிப்பார் என அவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்போதைக்கு "2.0" படத்தின் வசூல் முறியடிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.
அதை ரஜினிகாந்த்தே அவருடைய அடுத்தடுத்த படங்களில் முறியடிப்பாரா, அல்லது "2.0" படத்தை இயக்கிய ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும "இந்தியன் 2" படம் முறியடிக்குமா, அல்லது வேறு படங்கள் முறியடிக்குமா என்பதற்கு சற்றே பொறுமை காக்க வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!