த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள்
Advertisement
Advertisement
த்ரிஷா படத்தில் கெஸ்ட் ரோலில் மூன்று பிரபல ஹீரோக்கள்
மே 29, 2023
அ நிறம் | அளவு
Advertisement
பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த த்ரிஷா, அதைத் தொடர்ந்து தற்போது தி ரோடு என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படம் ஆக்சன் கதையில் உருவாகி வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதையடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அடுத்தபடியாக வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் கதையின் நாயகியாக த்ரிஷா நடிக்கப் போகிறார். கவுரவ் நாராயணன் இயக்கும் இந்த படத்தில் மூன்று பிரபல ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!