
மலையாளத்தில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 2018
இதுவரையிலும் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தைப் பிடித்த படமாக "புலி முருகன்" படம் மட்டுமே இருந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 134 கோடி. அந்த வசூல் சாதனையை மூன்று வாரங்களுக்குள்ளாகவே முறியடித்துள்ளது "2018" திரைப்படம். ஜுட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, தன்வி ராம் மற்றும் பலர் நடித்த அப்படம் மே 5ம் தேதி மலையாளத்தில் வெளியானது. கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
தற்போது 150 கோடி வசூலைக் கடந்து மலையாளத் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!