
தாணு தயாரிப்பில் நான் ஈ சுதீப்
சுதீப் நடித்து கன்னடத்தில் தயாரான "விக்ராந்த் ரோணா" கடந்த வருடம் பான் இந்தியா படமாக வெளிவந்தது. அடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தாணு தயாரிக்க உள்ள படத்தில் சுதீப் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது பற்றிய அறிமுக வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டனர். சுதீப்பின் 46வது படமாக இது உருவாக உள்ளது. விரைவில் படத்தின் டீசருடன் வருவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்கள். இப்படமும் ஒரு பான் இந்தியா படமாகத்தான் வெளிவரும் எனத் தெரிகிறது.
கடந்தாண்டு செல்வராகவன் இயக்க தனுஷ் நடித்த "நானே வருவேன்" படத்திற்குப் பிறகு தாணு தயாரிக்கும் படம் இது. அவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள "வாடி வாசல்" படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது இன்னமும் தெரியாத நிலையில் உள்ளது. வெற்றிமாறன் இயக்க சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் அது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!