
‛விஜய் 68 அறிவிப்பு : லியோ ரசிகர்கள் வருத்தம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த "மாஸ்டர்" படமும், கமல்ஹாசன் நடித்த "விக்ரம்" படமும் பெரும் வசூலைக் குவித்தன. "விக்ரம்" படத்தை விடவும் "லியோ" படம் அதிக வசூலைக் குவித்து சாதனை புரியும் என அவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஆனால், விஜய் 68 படம் பற்றிய அறிவிப்பு அதற்குள்ளாகவே வெளியாகிவிட்டது. இதனால், தேவையற்ற ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக "லியோ" ரசிகர்கள் கருதுகிறார்கள். அது பற்றிய தங்களது கமெண்ட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
"லியோ" வரும் வரை "விஜய் 68" குழு அமைதி காப்பதே சிறப்பு. "லியோ" படம் வெளிவந்த பின் விஜய் 68 படம் பற்றிய அப்டேட்டுகள் வந்தால்தான் எந்த குழப்பமும் இருக்காது இருக்கும் என அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. எனவே, விஜய் 68 குழு அறிவிப்போடு, கொஞ்சம் அமைதியாக இருந்து "லியோ" படப்பிடிப்பு முடிவடையும் சமயத்தில் அடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிடலாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!