
டெஸ்ட் படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஒரு அசத்தல் போட்டோ
அவரது இயக்கத்தில் உருவாகும் இந்த முதல் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், லாஸ்யா நாகராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. மறக்க முடியாத சில படங்களைக் கொடுத்தவர்கள் அப்புகைப்படத்தில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் அதைப் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
"ரன்" படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த மாதவன், மீரா ஜாஸ்மின், "ஆயுத எழுத்து" படத்தில் இணைந்து நடித்த மாதவன், சித்தார்த், மற்றும் அவர்களுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் நயன்தாரா என சில பல நினைவுகளை அப்புகைப்படம் ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் மீண்டும் தமிழில் நடித்து வருகிறார்.
பான்இந்தியா படமாக வெளிவர உள்ள இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஒரு படம். சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!