
2023ல் அதிரடியாகக் குறைந்த நேரடி ஓடிடி ரிலீஸ்
ஆனால், இந்த 2023ம் ஆண்டில் 5 மாதங்கள் வரையிலும் ஒரே ஒரு படம்தான் ஓடிடியில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. சர்ஜுன் கேஎம் இயக்கத்தில் கலையசரன், மிர்ணா மேனன் நடித்த "புர்கா" படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அப்படத்தையும் முழுநீளத் திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. 1 மணி நேரம் 22 நிமிடங்கள் மட்டுமே நேரம் கொண்ட படம் அது.
நாளை வெளியாக உள்ள "மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்" படத்தை வேண்டுமானால் இந்த ஆண்டில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் முழு நீளத் திரைப்படம் என்று சொல்லலாம். "கொன்றால் பாவம்" படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ள நிலையில் ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை நேரடியாக வெளியிடுவதற்கு விருப்பம் காட்டவில்லையா அல்லது தயாரிப்பாளர்கள் தியேட்டர்கள் வெளியீட்டை மட்டுமே விரும்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அப்படி குறைந்தால் அது ஓடிடி நிறுவனங்களுக்கான இழப்பாகத்தான் பார்க்கப்படும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!