
டாடா, அயோத்தி, குட் நைட் - சிறிய படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு
இருந்தாலும் அப்படிப்பட்ட சில நூறு படங்களுக்குக் கிடைக்காத பெயரும், புகழும் சில சிறிய படங்களுக்குக் கிடைத்துள்ளன. அப்படியான படங்களாக இந்த வருடத்தில் இதுவரையில் வெளிவந்த 50க்கும் மேற்பட்ட சிறிய படங்களில் மூன்றே மூன்று படங்கள் பாராட்டைப் பெற்றுள்ளன.
கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடித்து பிப்ரவரி 10ம் தேதி வெளிவந்த "டாடா" மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பிரீத்தி அஸ்ரானி மற்றும் பலர் நடித்து மார்ச் மாதம் 3ம் தேதி வெளிவந்த "அயோத்தி", விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் மே 12ம் தேதி வெளிவந்த "குட் நைட்" ஆகிய மூன்று படங்களும் சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த மூன்று படங்களின் "கன்டென்ட்" களும் வித்தியாசமாக இருந்ததும், அதைச் சொல்ல வேண்டிய விதத்தில் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சொன்னதே அந்தப் படங்களின் வரவேற்புக்கும் காரணம்.
இப்படங்களை இயக்கிய மூவருக்குமே அறிமுகப்படங்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. 2023ம் வருடத்தின் முக்கிய படங்களில் இந்த மூன்று படங்களும் இடம் பிடிக்கப் போவது உறுதி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!