
அனைவரது பிரார்த்தனையால் குணமடைந்து வருகிறேன் : பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தகவல்
கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பாம்பே ஜெயஸ்ரீ. அப்போது அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோமா நிலைக்கு சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மெல்ல குணமாகி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், உங்கள் அனைவரது பிரார்த்தனையால் நான் நன்றாக குணமடைந்து வருகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் வழக்கம்போல் சினிமாவில் பாட வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!