
விஜய், வெங்கட் பிரபு புதிய கூட்டணி உண்மையா...?
இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக மற்றொரு தகவல் பரவியது. அந்த தகவலின் படி, விஜய்-ன் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார் இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏ. ஜி. எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனராம். விஜய்யின் பிறந்தநாளில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் வெங்கட்பிரபு ஒரு பேட்டியின் போது விஜய்யின் படத்தை பற்றி பேசினார். அந்த வீடியோ டிரெண்ட் ஆனது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!