
புதிய பிசினஸ் தொடங்கிய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் 2020ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் காஜல் அகர்வால் சொந்தமாக "காஜல் பை காஜல்" என்ற பெயரில் அழகு சாதனப்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
காஜல் கூறுகையில், “என் கணவர் உதவி இல்லாமல் இந்த தொழிலை என்னால் தொடங்கி இருக்க முடியாது. அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார். எப்போதும் ஒரே வருமானத்தை நம்பி இருக்க கூடாது என்று அவர்தான் அடிக்கடி சொல்வார். அழகு சாதன பொருட்களில் முக்கியமானது கண் அழகு சாதனங்கள் தான். அவை பாதுகாப்பானதாக இல்லை என்றால் பல பிரச்னைகள் ஏற்படும். இதனால் பாதுகாப்பான கண் அழகு சாதன பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இதனை தொடங்கி உள்ளேன்” என்று காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!