
டபுள் ஆக மீண்டும் வரும் பூரி ஜெகன்னாத்
இந்நிலையில் பூரி ஜெகன்னாத் அவரது இயக்கத்தில் 2019ல் வெளிவந்த "ஐஸ்மார்ட் ஷங்கர்" படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" எனப் பெயரிட்டுள்ளார்கள். முதல் பாகத்தில் நடித்த ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கப் போகிறார். லிங்குசாமி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த "த வாரியர்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்தான் ராம் பொத்தினேனி. அப்படத்தின் தோல்விக்குப் பிறகு தெலுங்கில் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் ஒரு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
2019ல் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ராம் பொத்தினேனி, நபா நடேஷ், நிதி அகர்வால் மற்றும் பலர் நடித்து வெளிவந்த "ஐஸ்மார்ட் ஷங்கர்" படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. பூரிக்கு மற்ற சில முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்கத் தயங்கிய நிலையில் ராம் பொத்தினேனி முன்வந்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "டபுள் இஸ்மார்ட்" படம் 2024ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி வெளியாகும் என்றும் இப்போதே அறிவித்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!