காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி!
Advertisement
Advertisement
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி!
மே 14, 2023
அ நிறம் | அளவு
Advertisement
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்". முதன்முறையாக ஒரு முழுநீள பக்கா கிராமத்து கதையில் நாயகனாக நடிக்கிறார் ஆர்யா. நாயகியாக சித்தி இதானி நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . ட்ரம்ஸ்டிக் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவித்துள்ளனர் . இந்த படம் வருகின்ற ஜூன் 2ம் தேதி அன்று வெளியாகும் என்று போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!