
‛கங்குவா கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவு
இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக பணியாற்றி வரும் சுப்ரீம் சுந்தர், சூர்யா, சிவா உள்ளிட்ட குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவடைந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து விரைவில் சென்னையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!