
கீர்த்தி சுரேஷ், கிரித்தி ஷெட்டி, கிரித்தி சனோன்…
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பும் இப்படி சில பெயர்கள் ஏறக்குறைய ஒன்றாக இருந்து ரசிகர்களைக் குழப்பின. இப்போது "கீர்த்தி, கிரித்தி" என சில பெயர்கள் குழப்பி வருகின்றன.
தமிழ், தெலுங்கில் ஏற்கெனவே முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். "த வாரியர்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நேற்று வெளியான "கஸ்டடி" படத்திலும் நடித்துள்ளவர் கிரித்தி ஷெட்டி. சில தினங்களுக்கு முன்பு வெளியான "ஆதிபுருஷ்" படத்தில் நடித்துள்ளவர் பாலிவுட் நடிகையான கிரித்தி சனோன்.
இவர்களது பெயரை கீர்த்தி என்றும் கிரித்தி என்றும் கிர்த்தி என்றும் அவரவர் அவர்களது வசதிக்கு ஏற்ப எழுதிக் கொள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட மூவருமே தற்போது பிரபலமாக இருப்பவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!