
இரு மொழிப் படங்கள் எனச் சொல்லி தமிழ் ரசிகர்களை ஏமாற்றுவதா ?
நேற்று வெளியான "கஸ்டடி" படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்ட படம் என்று சொன்னார்கள். ஆனால், கதை நடப்பது முழுவதும் ஆந்திராவில். படத்தின் கதைக்களம், காட்சிகளில் இடம் பெறும் கடைகளின் பலகைகள், என அனைத்திலுமே தெலுங்கு வாசம் மட்டுமே வீசுகிறது. நடிப்பவர்கள் அனைவரும் தமிழில் பேசினால் மட்டும் போதுமா ?, படம் முழுவதுமே தமிழ் வாசம் இருக்க வேண்டமா என்ற கேள்வி எழுகிறது.
இப்படித்தான் இதற்கு முன்பு வெளிவந்த தனுஷ் நடித்த "வாத்தி", சிவகார்த்திகேயன் நடித்த "ப்ரின்ஸ்", ராம் பொத்தினேனி நடித்த "த வாரியர்" ஆகிய படங்களையும் முழுக்க முழுக்க தெலுங்கு பின்னணியுடன் கூடிய தமிழ்ப் படமாகக் கொடுத்ததால் தமிழ் சினிமா ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தாமல் ஏமாற்றின. அதே நிலைமை தற்போது "கஸ்டடி" படத்திற்கும் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை தெலுங்கிலேயே எடுத்து தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டிருந்தால் கூட ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். வெங்கட் பிரபுவின் இமேஜும் பாதிக்கப்பட்டிருக்காது என்று மேலும் கூறுகிறார்கள். இனியாவது நம் இயக்குனர்கள் தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய விரும்பாமல் ஒரு குதிரையில் ஏறி பயணிப்பார்களா ?.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!