
இளைஞர்களுக்கு போட்டியாக படம் இயக்குவேன்: பாரதிராஜா
இதன் அறிமுக விழா நடந்தது. இதில் பாரதிராஜா பேசியதாவது: இந்தப்படம் எனக்கு புதிய அனுபவம். இந்தபடம் வழக்கமான சினிமாவிலிருந்து தனித்து நிற்கிறது. இந்த படத்தின் கதைகள் அனைத்தும் காதலை மையமாக கொண்டது. காதல் ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.
நான் காதல் செய்யவில்லை என்றால் கலைஞனாகியிருக்க முடியாது. எவன் ஒருவன் காதலை அழகாக சொல்கிறானோ அவன் தான் உண்மையான கலைஞன். நான் 85 வயதிலும் காதலிக்கிறேன் என்பதை தைரியமாகச் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. 9வது படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இருந்தாள். பின், சென்னை வந்து இத்தனை ஆண்டுகளில் இதுவரை நான்கு காதல்களைக் கடந்துவிட்டேன்.
என்னை எல்லோரும் அன்னாந்து பார்க்கிறார்கள். நான் இன்றைய இளம் இயக்குனர்களை அதைவிட அன்னாந்து பார்க்கிறேன். நான் அவர்களுடன் போட்டியிடுவேன். என்னாலும் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப படம் எடுக்க முடியும் என்பதை நிரூபிப்பேன். 85 வயதாகிறது எனது உடல்நிலை ஒத்துழைத்தால் அதனை சாதித்துக் காட்டுவேன் என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!