
திருமணம் பற்றி சர்ச்சையாக பேசவில்லை : நிகிலா விமல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகிலா விமல் அளித்த ஒரு பேட்டியின் போது, கேரள மலபார் இஸ்லாமிய திருமணங்கள் குறித்து அவர் கூறுகையில், கண்ணூரில் நடக்கும் அது போன்ற திருமண நிகழ்வுகளில் அங்குள்ள பெண்கள், வீடுகளின் சமையலறை பக்கம் தான் உணவு பரிமாறுவார்கள் என்பது போன்று அவர் கூறியதாக செய்திகள் வெளியானது. அவரது இந்த பேச்சுக்கு பல பக்கம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இது குறித்து நிகிலா விமல் கூறும்போது, “தற்போது வெளியாகி உள்ள செய்திகளில் கூறப்படுவது போல, எதையும் நான் சர்ச்சையாக கூறவில்லை. சொல்லப்போனால் எனது பேட்டியில் நான் கூறிய ஒரு கருத்தை திரித்து தவறாக வெளியிட்டுள்ளார்கள். அதனால் இது தொடர்பாக நான் யாருக்கும் விளக்கம் எதுவும் சொல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!