
பவன் கல்யாண் படத்தை விமர்சித்த பூனம் கவுர்
இந்த நிலையில் நடிகை பூனம் கவுர் போஸ்டர் குறித்து கடுமையான கருத்துக்களை முன்வைத்துள்ளார் . பவன் கல்யாணின் கால்களைக் காட்டும் போஸ்டர் ஒன்று வெளியானது அதற்கு பூனம் கவுர், பவன் கல்யாண் காலடியில் உஸ்தாத் பகத் சிங் பெயர் உள்ளது. இது சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கை அவமதிக்கும் செயல் என்று பூனம் டுவீட் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛புரட்சியாளர்களை உங்களால் மதிக்க முடியாத போது அவர்களை அவமதிக்காதீர்கள். சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் போஸ்டர் பகத்சிங் பெயரை காலுக்கு கீழே வைத்து அவமானப்படுத்துகிறது. இதை எப்படி சொல்வது ஈகோவா அல்லது அறியாமையா"" என பதிவிட்டார்.
இந்நிலையில் அடுத்து வெளியான இந்த படத்தின் மற்றொரு போஸ்டரில் படத்தின் டைட்டிலை மேலே குறிப்பிட்டு திருத்தி வெளியிட்டனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!