
ஆதிபுருஷ் டிரைலரின் 24 மணி நேர சாதனை
24 மணி நேரத்தில் இந்த டிரைலர் ஐந்து மொழிகளிலும் சேர்த்து 70 மில்லியன் பார்வைகளை, அதாவது 7 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்திலும், உலக அளவில் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையையும் புரிந்துள்ளது.
ஐந்தே நிமிடங்களில் ஒரு லட்சம் லைக்குகளைப் பெற்ற ஹிந்தி டிரைலர், 9 நிமிடங்களில் 1 லட்சம் லைக்குகளைப் பெற்ற தெலுங்கு டிரைலர், 10 நிமிடங்களில் ஐந்து மொழிகளில் 10 லட்சம் பார்வைகள், 20 நிமிடங்களில் 20 லட்சம் பார்வைகள் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்துள்ளது.
"பாகுபலி 2" படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த "சாஹோ, ராதேஷ்யாம்" தோல்விப் படங்களாக அமைந்த நிலையில் இந்த "ஆதிபுருஷ்" பெரும் வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது என பாலிவுட் வட்டாரங்களிலும் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். அதற்கு டிரைலருக்கான வரவேற்பே சாட்சி என்று பிரபாஸ் ரசிகர்களும் மகிழ்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!