
அனுஷ்கா படத்திற்கு பாடல் பாடும் தனுஷ்
மே 08, 2023
Advertisement
இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் நவின் பொலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். சமையல் கலைஞராக அனுஷ்கா நடித்துள்ளார். காதலுடன் காமெடி கலந்த படமாக உணவை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறது. இந்த படத்தில் ஒரு பாடலை பாடுவதற்காக நடிகர் தனுஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனுஷே பாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை இப்படத்தின் அடுத்த சிங்கிள் ஆக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!