
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி!
அதோடு அஜித்குமார் 40 நாட்களில் தனக்கான காட்சிகளை படமாக்கி விட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாராம். அதனால் முதல் கட்டமாக அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளார். நான்கு மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்து இறுதிக்கட்ட பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ள மகிழ்திருமேனி, அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் தினத்தில் விடாமுயற்சியை திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் இப்படத்தில் அஜித்தின் ‛வி" செண்டிமென்ட் மீண்டும் தொடர்வதோடு, கடந்த பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தின் வெற்றி காரணமாக மீண்டும் விடாமுயற்சி படத்தையும் பொங்கல் திருநாளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!