
தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது: மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவிப்பு
இந்த படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரதமர் மோடி, கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் போது இந்த படத்திற்கு எதிராக போராடுபவர்கள் பயங்கரவாதிகள் என குற்றம்சாட்டி பேசியிருந்தார். சென்னையில் 15 இடங்களில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் வெளியாவதை ஒட்டி 650 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் திருமங்கலம் வி.ஆர்.மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில், சென்னையில் அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட 13 திரையரங்குகளில் "தி கேரளா ஸ்டோரி" படம் வெளியானது. மேலும், சட்ட ஒழுங்கு பிரச்னை மற்றும் படத்திற்கான வரவேற்பு இல்லாததால் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் இப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அறிவித்துள்ளதால் ஆன்லைன் டிக்கெட் முறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!