
இசை அமைப்பாளர் ஆனார் சக்திஸ்ரீ கோபாலன்
"தமிழ்ப் படம்", "விக்ரம் வேதா", "இறுதி சுற்று" "மண்டேலா" உள்ளிட்ட படங்களை தயாரித்த எஸ்.சஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீகோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!