
லால் சலாம் படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினி!
விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்ததுள்ள நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள இருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்து மும்பையில் நடைபெற உள்ள லால் சலாம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மும்பை செல்ல இருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ரஜினிகாந்த்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!