
5 மொழிகளில் வெளியாகும் திரிஷாவின் தி ரோட்
இந்த படம் ஹீரோயின் சப்ஜெக்ட் ஆக்ஷன் படம். இதில் அவருடன் "சார்ப்பட்டா" புகழ் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏஏஏ சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கி உள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அருண் வசீகரன் கூறியதாவது: திரிஷாவின் திரைப்பயணத்தில் "தி ரோட்" திரைப்படம் மிகப்பெரியப் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இரு பாகங்களுக்குப் பிறகு இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள காட்டுப் பகுதிகளில் படமாக்கி உள்ளோம். மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!