
நான் இன்னும் சாகவில்லை : ரசிகருக்கு செல்வராகவன் கொடுத்த பதில்
சோசியல் மீடியாவில் அவ்வப்போது தத்துவங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் செல்வராகவன், தற்போது ஒரு ரசிகர் டுவிட்டரில் கேட்ட கேள்விக்கு கொடுத்துள்ள பதில் கவனம் பெற்று வருகிறது. அதாவது, விவேக் ஒரு காமெடியில் சொல்லுவார். இயக்குனர் ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி இருக்கார். அப்படி ஒரு படம் இது. அப்படி ஒரு இயக்குனர் செல்வராகவன். அது ஒரு காலம் என்று பதிவிட்டு, காதல் கொண்டேன் படத்தின் பெயரை குறிப்பிட்டுளளார்.
ஆனால் இந்த பதிவில் செதுக்கி இருக்கிறார் என்ற வார்த்தையை செத்துக்கிருக்கார் என்று தவறுதலாக அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அதற்கு பதிலளித்து உள்ள செல்வராகவன், ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை அல்லது ஓய்வையும் அறிவிக்கவில்லை. தற்போது எனக்காக சில நேரங்களை செலவழித்து வருகிறேன். விரைவில் திரும்பி வருவேன் என்று அவருக்கு டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!