
யோகிபாபு படப்பிடிப்பில் கடைசி பிறந்தநாளை கொண்டாடிய மனோபாலா
இதுகுறித்த வீடியோ ஒன்றை காமெடி நடிகர் சாம்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், மனோபாலா சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. நண்பர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோபாலா சாருடம் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இது இருக்கும். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் கதிர்வேலு கூறுகையில், ‛‛மரண வேதனையிலும் படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே "என்னால முடியலடா! மருத்துவ மனைக்கு போய் வருகிறேன்" என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா? கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? காலங்கள் கடந்தாலும் கடைசியாய் நடித்து எங்களோடு வாழ்ந்த கணங்கள் என்றும் எங்கள் நினைவில் நிலைத்து நிற்கும்,"" என தெரிவித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!