
விரூபாக்ஷா - தெலுங்கில் 80 கோடி வசூலித்த படம் தமிழில் ரிலீஸ்
தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்து வெற்றி பெற்ற “அம்மன், அருந்ததி” படங்கள் போல பக்தி, மாயாஜால தந்திரம் நிறைந்த படமாக இந்த "விரூபாக்ஷா" படம் உருவாகி உள்ளது. 1991ல் கதை நடப்பதாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இம்மாதிரியான படங்கள் தெலுங்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெறும். அதுபோலவே இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை வெளியிட, தமிழ் வசனங்களை பிரபாகர் எழுதியுள்ளார். தெலுங்கில் படம் வெற்றி பெற்றுள்ளதால் நாளை மே 5ம் தேதி படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே பத்திரிகையாளர்களுக்கு காட்சியைத் திரையிட்டுவிட்டனர். தெலுங்கைப் போல தமிழிலும் படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!