
பொன்னியின் செல்வன் 2 வசூல் அப்டேட் - துணிவு ஓவர்டேக், அடுத்த டார்கெட் வாரிசு
நான்கு நாள் வசூலிலேயே 200 கோடி வசூலைக் கடந்த "பொன்னியின் செல்வன் 2" படத்தின் வசூல் தற்போது அஜித் நடித்து வெளிவந்த "துணிவு" படத்தின் வசூலை முறியடித்துவிட்டது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து இந்த ஆண்டில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் விஜய்யின் "வாரிசு" பட வசூலை மிஞ்ச வேண்டும். அந்த 300 கோடி வசூலை இந்த வார இறுதிக்குள் "பொன்னியின் செல்வன் 2" கடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதன் மூலம் தென்னிந்திய அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இப்படம் முதலிடத்தை நோக்கி முன்னேறும். இந்த ஆண்டில் இதற்கடுத்து வர உள்ள படங்களில் ரஜினிகாந்த்தின் "ஜெயிலர்" படம்தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம். அந்தப் படம் வசூலிக்கப் போவதை விடவும் அதிக வசூலைப் பெற்று "பொன்னியின் செல்வன் 2" உச்சத்திற்கு செல்லுமா என்பது இனி வரும் நாட்களில்தான் தெரியும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!